கையிருப்பு நெல் சந்தைகளுக்கு விநியோகம்

கையிருப்பு நெல் சந்தைகளுக்கு விநியோகம்

கையிருப்பு நெல் சந்தைகளுக்கு விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2019 | 3:19 pm

Colombo (News 1st) நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பிலுள்ள நெல், அடுத்த வாரம் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

50 000 மெற்றிக் தொன் நெல் தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் பெரும்போக விளைச்சல் நெல் சந்தைக்கு வரும் வரையில் இந்த கையிருப்பு நுகர்வோரின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் நிலவும் அரிசியின் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் ஒன்றிணைந்து அமைத்துள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு மொத்த நெல்லும் விநியோகிக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்