ஆனந்தசங்கரியின் சுதந்திரபுர காணி உறுதிப்பத்திரம் மாவட்ட செயலாளரிடம் கையளிப்பு

ஆனந்தசங்கரியின் சுதந்திரபுர காணி உறுதிப்பத்திரம் மாவட்ட செயலாளரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2019 | 8:36 pm

Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் V. ஆனந்தசங்கரி, முல்லைத்தீவு – சுதந்திரபுரத்திலுள்ள தமது காணியின் உறுதிப்பத்திரத்தை இன்று (23) மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளார்.

காணி இல்லாத மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகவே அவர் தமது காணியை அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளார்.

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் உள்ள 20 ஏக்கர் காணியை பகிர்ந்தளிப்பதாக V. ஆனந்தசங்கரி, குறித்த காணியில் குடியேறியுள்ள மக்களுக்கு அண்மையில் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைவாகவே, இந்தக் காணிக்கான உறுதிப்பத்திரம் இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்