வத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு: மூவர் கைது

வத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு: மூவர் கைது

வத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு: மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2019 | 10:11 am

Colombo (News 1st) வத்தளை – கல்யாணி மாவத்தை பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச அதிகாரிகள், காணிப் பதிவாளர் அலுவலகம், சட்டத்தரணி, அதிபர், இலங்கை துறைமுக அதிகார சபை, திருமண பதிவாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் முத்திரைகளைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பில், போலி ஆணவங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்