சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டது

by Staff Writer 21-09-2019 | 5:18 PM
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் தமது பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்துக்களின் போது ஏற்படக்கூடிய நட்டத்தை ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் அறவிட ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சட்டப்படி வேலை போராட்டத்தில் ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ஓட்டுநர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார். ரயில்வே தொழிற்சங்கத்தினரின் சட்டப்படி வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்றைய தினம் 50-இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தாமதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.