காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்

by Staff Writer 21-09-2019 | 5:10 PM
Colombo (News 1st) பலப்பிட்டியவிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்பிராந்தியங்களில் நாளை (22) வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வரை காற்று வீசுமெனவும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை , கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யுமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.