ஐ.தே.க செயற்குழுவிற்கு எவரும் நியமிக்கப்படவில்லை

ஐ.தே.க செயற்குழுவிற்கு எவரும் நியமிக்கப்படவில்லை - அகில விராஜ் காரியவசம்

by Staff Writer 21-09-2019 | 3:32 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் உள்ள வெற்றிடத்திற்கு இதுவரை உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு பிரதமருக்கு நெருக்கமானவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று காலை தெரிவித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் தாமதம் நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏனைய செய்திகள்