முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவாரா?

by Staff Writer 20-09-2019 | 8:37 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தமக்கெதிரான குற்றப்பிரேரணைக்கான காரணம் மற்றும் அதன் பின்புலம் ஆகியவற்றை உள்ளடக்கி 'மீயுயர்' எனும் பெயரில் நூல் ஒன்றை இன்று வெளியிட்டார். குற்றப்பிரேரணையின் உள்ளடக்கம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த நூல், இன்று ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியிடப்பட்டது. இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் திட்டம் பற்றி அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அது பொதுமக்களின் விருப்பம் எனவும் தான் இதுவரை எதனையும் திட்டமிடவில்லை எனவும் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார். மேலும், நாட்டின் பொதுமக்களும் எதிர்கால வளர்ச்சியுமே தனக்கு முக்கியம் என கூறினார்.