by Staff Writer 20-09-2019 | 7:04 PM
Colombo (News 1st) நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்க ஆர்வமாக உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்விமான்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட தரப்பினர் மாற்றுக்குழு ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்க தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் தற்போது பரிசீலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த விடயம் தொடர்பில் தாம் இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.