யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் அதிபர் கைது

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் அதிபர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2019 | 6:26 pm

Colombo (News 1st) இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் 7-க்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தை அதிபர் கோரியுள்ளார்.

அதில் ஏற்கனவே 50,000 ரூபா பணத்தை அதிபர் பெற்றுக்கொண்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

மிகுதி 50,000 ரூபா இலஞ்சப் பணத்தை இன்று பெற்றுக்கொண்டபோதே அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்