இந்தியாவில் e-cigarette-களுக்கு தடை

இந்தியாவில் e-cigarette-களுக்கு தடை

இந்தியாவில் e-cigarette-களுக்கு தடை

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2019 | 4:16 pm

இந்தியாவில் e-cigarette எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

e-cigarette எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்களுக்கு தடை விதிக்க நேற்று முன்தினம் (18) அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, e-cigarette-களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், விற்பனை, விநியோகம், சந்தைப்படுத்தல், விளம்பரப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய நிதியமைச்சு அறிவித்துள்ளது.

e-cigarette மற்றும் இன்ஹேலர் பயன்பாட்டுடன் தொடர்புடைய நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தொடர்பில் அமெரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சமீபத்தில் ஆய்வுகளை ஆரம்பித்தன.

இனங்காணப்படாத நுரையீரல் நோய்கள் தொடர்பில் அமெரிக்காவின் 14 மாநிலங்களில் 100-இற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகிய பின்புலத்தில் இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]irst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்