31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 8:23 am

Colombo (News 1st) 5824 பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் காண்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்குத் தரமுயரத்தப்பட்டுள்ளனர்.

2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

31 000 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள், 3 கட்டங்களாக பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஜனவரி மற்றும் 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகிய 3 பிரிவுகளில், சிரேஷ்ட தன்மையை கருத்திற்கொண்டு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத அதிகாரிகளைக் கருத்தில் கொண்டு பதவி உயர்வு வழங்கும் ஜனாதிபதியின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்