மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 1:33 pm

Colombo (News 1st) மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் ஆகியோரை நாளை (20) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளை காலை 10 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.

2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய எதிர்வரும் நவம்பம் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.

அதற்கமைய, இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலுக்கு 1 59 92 096 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்