ஹபரண வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஹபரண வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

by Staff Writer 19-09-2019 | 7:52 AM
Colombo (News 1st) ஹபரண - பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஹபரணயிலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் பொலன்னறுவையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலையிருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் தியசென்புர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலை மற்றும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.