வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

by Staff Writer 19-09-2019 | 8:15 AM
Colombo (News 1st) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (18) காலை ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு இன்று (19) காலை 8 மணியுடன் நிறைவடைந்துள்ளது. சம்பளப் பிரச்சினையை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. நேற்று காலை முதல் அத்தியவசிய சேவைகளைத் தவிர ஏனைய வைத்திய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.