ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 19-09-2019 | 8:01 AM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அழைக்கப்பட்டுள்ளார். இன்று (19) பிற்பகல் 1.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை உரிய முறையில் பொறுப்பேற்காது, அரச நிதியை செலவிடுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கேவினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜரான மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். தேவையான ஆவணங்களை அவர் நேற்றைய தினம் கொண்டுசெல்லத் தவறியமையால், சாட்சி விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களுடன் இன்று ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்