ஹபரண வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

ஹபரண வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

ஹபரண வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 7:52 am

Colombo (News 1st) ஹபரண – பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹபரணயிலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் பொலன்னறுவையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலையிருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் தியசென்புர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலை மற்றும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்