வசந்த கரன்னாகொட , ரொஷான் குணதிலக்கவிற்கு பீல்ட் மார்ஷலுக்கு சமமான பதவி உயர்வு

வசந்த கரன்னாகொட , ரொஷான் குணதிலக்கவிற்கு பீல்ட் மார்ஷலுக்கு சமமான பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 8:27 pm

Colombo (News 1st) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு பீல்ட் மார்ஷலுக்கு சமமான கௌரவ பதவி நிலை உத்தியோகப்பூர்வமாக இன்று வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வசந்த கருணாகொடவிற்கு Admiral of the Fleet என்ற கௌரவ பதவி நிலை வழங்கப்பட்டது.

ரொஷான் குணதிலக்கவிற்கு Marshal of the air force கௌரவ பதவி நிலை வழங்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, விமானப்படை மற்றும் கடற்படைக்கு இவர்கள் தலைமை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்