முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 7:45 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகின்றது.

2016 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வௌியேறிய போதிலும், இதுவரையில் தங்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே அரச தொழிலில் ஈடுபட்டு வருவோரின் பெயர்கள், நியமனங்களுக்காக மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறு இரு கட்டங்களில் மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அரசியல்வாதிகளும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு வருகை தந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்