மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 7:03 pm

Colombo (News 1st) திட்டமிடப்பட்டவாறு பாராளுமன்ற நடவடிக்கைகளை இன்று முன்னெடுக்க முடியாமற்போனது. எனினும், மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த, ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதில் வழங்கப்படாத நிலையில், இன்றைய அமர்வு நிறுத்தப்பட்டது.

வங்கி நிதியத்தை அதிகரிப்பதற்காக கடன் முறிகள் மற்றும் பங்குகளை விநியோகிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனூடாக வங்கியை தனியார்மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியது.

எதிர்க்கட்சி முன்வைத்த திருத்தங்களில் ஒன்றுக்கு மாத்திரம் அரசாங்கம் இணங்கியதுடன், வாக்கெடுப்பு நடத்தப்பட்ட திருத்தத்தில் எதிர்க்கட்சி தோல்வியடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்