பொகவந்தலாவை, நோர்வூட்டில் கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

பொகவந்தலாவை, நோர்வூட்டில் கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

பொகவந்தலாவை, நோர்வூட்டில் கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 5:32 pm

Colombo (News 1st) பொகவந்தலாவையில் கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொகவந்தலாவை – ரொக்ஹீல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு விக்கிரகங்களில் காணப்பட்ட நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நோர்வூட் – சாஞ்சிமலை மற்றும் பொயிஸ்டன் ஆகிய தோட்டங்களிலுள்ள இரண்டு ஆலயங்களிலும் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அங்கிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

ஒரே குழுவினரால் இந்த திருட்டுச் சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்