சக்தி FM இன் டிஜிட்டல் புரட்சி: ‘பார்த்தீபா’ படத்தின் Trailer வௌியீடு

சக்தி FM இன் டிஜிட்டல் புரட்சி: ‘பார்த்தீபா’ படத்தின் Trailer வௌியீடு

சக்தி FM இன் டிஜிட்டல் புரட்சி: ‘பார்த்தீபா’ படத்தின் Trailer வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 9:50 am

Colombo (News 1st) இலங்கை வானொலி வரலாற்றில் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரைப்படமான ‘பார்த்தீபா’ திரைப்படத்தின் Trailer மற்றும் பாடல்கள் நேற்று (18) வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள திரையரங்கொன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசீங்க, குழுமப் பணிப்பாளர் ஷிரான் மனுகுலசூரிய, MBC வலையமைப்பின் நிறைவேற்று அதிகாரி நியோமி நலவன்ச, இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

பார்த்தீபா டிஜிட்டல் திரைப்படத்தின் Trailer மற்றும் பாடல்களை சக்தி FM Youtube தளத்திலும் Facebook பக்கத்திலும் பார்வையிடமுடியும்.

இதேவேளை, மிக விரைவில் இந்த திரைப்படம் வௌியிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்