நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 4:04 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் 5 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ​ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

குறித்த 5 இந்திய மீனவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களின் ட்ரோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்