தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 8:17 am

Colombo (News 1st) தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள வீரராக இந்திய அணித்தலைவர் விராட் ​கோஹ்லி பதிவாகியுள்ளார்.

மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக அணித்தலைவர் குயின்டன் டி கொக் 52 ஓட்டங்களையும் டெம்பா பௌமா 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 40 ஓட்டங்களை பெற்றார்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி இறுதிவரை களத்தில் நின்று 3 சிக்ஸர்கள் 4 பவுன்டரிகளுடன் 72 ஓட்டங்களை விளாசினார்.

இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதன்போது விராட் ​கோஹ்லி சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த வீரராக பதிவானதுடன், அவர் 2441 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் சாதனையை இதன்போது விராட் கோஹ்லி முறியடித்தார்.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1 – 0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்