சவுதி தாக்குதலின் பின்னணியில் ஈரான்: ஆயுத எச்சங்களில் உறுதி

சவுதி தாக்குதலின் பின்னணியில் ஈரான்: ஆயுத எச்சங்களில் உறுதி

சவுதி தாக்குதலின் பின்னணியில் ஈரான்: ஆயுத எச்சங்களில் உறுதி

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 9:35 am

Colombo (News 1st) சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் எஞ்சிய பாகங்கள், தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளமையை உறுதிப்படுத்துவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது 18 ஆளில்லா விமானங்களும் 7 கப்பல் ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு ஹவூதி கிளர்ச்சிக்குழு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளது.

அத்துடன், அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்களாக செய்மதிப் படங்களையும்
புலனாய்வுத் தகவல்களையும் சமீபத்தில் வௌியிட்டிருந்தது.

எனினும், ஈரான் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றது.

சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவொரு போர் நடவடிக்கை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்