ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 10:55 am

Colombo (News 1st) ஐஸ் போதைப்பொருளுடன் நாட்டிற்கு வருகைதந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பயணப் பொதியில் மிகசூட்சுமமான முறையில் மறைத்துவைத்து ஐஸ் போதைப்பொருளை சந்தேகநபர் கொண்டுவந்துள்ளதாக பதில் சுங்கப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 864 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி 86 42 150 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 29 வயதான இந்தியப் பிரஜையிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்