இலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன

இலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன

இலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2019 | 9:22 am

Colombo (News 1st) பங்களாதேஷ் A அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை A குழாத்தில் அசேல குணரத்ன பெயரிப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் A அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் உத்தியோகபற்றற்ற டெஸ்ட் தொடருக்கான இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபற்றற்ற டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை A அணிகளின் தலைவரான அஷான் பிரியஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை A ஒருநாள் குழாத்தில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பெதும் நிஸ்ஸங்க, சந்துன் வீரக்கொடி, கமிந்து மெண்டிஸ், அமில அபொன்ஸோ, ஜெப்ரி வென்டர்ஸே, சாமிக கருணாரத்ன, விஷ்வ பெர்னாண்டோ, அசேல குணரத்ன ஆகியோர் ஒருநாள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

உத்தியோகபற்றற்ற டெஸ்ட் தொடருக்கான இலங்கை A குழாத்திலும் 17 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

மலிந்த புஷ்பகுமார, சங்கீத் குறே, சரித் அசலங்க ஆகியோருக்கு குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்