NTJ இரகசியங்களை வழங்க மறுத்தவருக்கு பிணை

NTJ-இன் இரகசியங்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க மறுத்தவர் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 18-09-2019 | 6:13 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி I.N.ரிஸ்வான் இன்று பிணை வழங்கி உத்தரவிட்டார். சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைக்கு அமைய அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வாராந்தம் கையொப்பமிடுமாறும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை வெளிநாட்டு கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் கடந்த ஒன்றரை மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.