செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 18-09-2019 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. முடிவுகள் தன்னிச்சையாக அல்லாது ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்படும் என சஜித் பிரேமதாச தெரிவிப்பு 02. பிரதமர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை 03. ஐ.தே.க. விரிவான கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிடும் என அகில விராஜ் காரியவசம் தெரிவிப்பு 04. ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு 05. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் 06. புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம் 07. பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கத் தீர்மானம் 08. சஜித்திற்கு ஆதரவு வழங்குவதில் ஆர்வமாக உள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 09. Synthetic போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு 10. பொலிஸ் உத்தியோகத்தர்கள் எண்மர் பணிநீக்கம் வௌிநாட்டுச் செய்தி 01. தமது தொழிற்சங்கத் தலைவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. ஆசிய சம்பியன்ஷிப் மேசைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டும் வெற்றியீட்டியுள்ளன. 02. இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.