இந்தி திணிப்பு வேண்டாம், பொதுமொழி இருப்பது நல்லது

இந்தி திணிப்பு வேண்டாம், பொதுமொழி இருப்பது நல்லது: ரஜினிகாந்த்

by Bella Dalima 18-09-2019 | 4:45 PM
இந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லதென நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டிற்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டிற்கு பொது மொழி ஒன்று கொண்டு வரமுடியாது
என ரஜினிகாந்த் கூறினார்.