நாட்டிலிருந்து சென்ற புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டிலிருந்து சென்ற புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டிலிருந்து சென்ற புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 10:22 am

Colombo (News 1st) பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் நாட்டிலிருந்து வௌியேறுகின்றமை நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டில் வசிக்கும் அவ்வாறான புத்திஜீவிகள் தமது நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை புரிய வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புத்திஜீவிகள் நாட்டிலிருந்து வௌியேறுவதைத் தடுப்பதற்கும் நாட்டிலிருந்து சென்றவர்களை நாட்டிற்கு மீள அழைப்பதற்கும் உரிய நடவடிக்கைககள் தேவைப்படுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்