தற்காலிக சேவையில் இணைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

தற்காலிக சேவையில் இணைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

தற்காலிக சேவையில் இணைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 1:40 pm

Colombo (News 1st) அரச நிறுவனங்களில் ஆரம்பத் தரத்திற்குரிய பதவிகளில் தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சலுகை அடிப்படையிலும் பிரதியீடாகவும் சேவையில் இணைந்து 180 நாட்களுக்கும் அதிகமாகப் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க நிர்வாக சுற்றுநிரூபம் 25/2004 மற்றும் 25/2004 (1) வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட தேவையைப் பூர்த்திசெய்யாதமையால், சேவையின் ஸ்திரத்தன்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத ஊழியர்களைப் போன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சேவைக்கான தேவை அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்பத் தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிக நாள் சம்பள ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதனடிப்படையில், 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்களுக்குத் தேவையான தகுதி எதிர்வரும் முதலாம் திகதியன்று பூர்த்திசெய்யும் அடிப்படையில் அந்த பதவிகளில் நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனம் வழங்குவதற்காக சுற்றறிக்கைக்கான ஒதுக்கீட்டு நடைமுறையை மேற்கொள்வதற்காக பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் அரச நிர்வாக இடர்முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்