சமாதானப் பேச்சுக்காக கதவுகள் திறந்தே இருக்கும் – தலிபான்

சமாதானப் பேச்சுக்காக கதவுகள் திறந்தே இருக்கும் – தலிபான்

சமாதானப் பேச்சுக்காக கதவுகள் திறந்தே இருக்கும் – தலிபான்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 12:23 pm

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடங்க விரும்பினால் தங்களது கதவுகள் திறந்திருக்கும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

BBC செய்தி நிறுவனத்தில் இடம்பெற்ற நேர்காணலின் போது தலிபான் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஷெர் மொஹமட் அப்பாஸ் ஸ்டனிக்ஸை (Sher Mohammad Abbas Stanikzai) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கான் சமாதானத்திற்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வாக அமையும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

சமாதானம் தொடர்பில் எமது கதவுகள் எப்போதும் திறந்தே காணப்படும். இந்த விடயம் தொடர்பில் அவர்களும் சிந்திப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் Sher Mohammad Abbas Stanikzai தெரிவித்துள்ளார்.

ஆப்கான் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, காபூலில் தலிபான்கள் நடத்திய தாக்குதலின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்