கௌரவத்தை பாதுகாக்காத கட்சியுடன் கூட்டிணையப் போவதில்லை: தயாசிறி ஜயசேகர

கௌரவத்தை பாதுகாக்காத கட்சியுடன் கூட்டிணையப் போவதில்லை: தயாசிறி ஜயசேகர

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 8:13 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கௌரவத்தை பாதுகாக்காத கட்சியுடன் கூட்டிணையப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட குழுக்களை சந்தித்து கலந்துரையாடினோம். தாமரை மொட்டைத் தவிர வேறு எந்த சின்னத்திற்கும் விருப்பம் தெரிவிக்கலாம் என அவர்கள் கூறினர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை அவர்களே வைத்துக்கொண்டு, சின்னத்தையும் மாற்றிக்கொள்ள விரும்பாவிட்டால், நாம் என்ன செய்வது? ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறுமனே அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். நாம் அதற்கு தயார் இல்லை. அதனாலேயே என்னுடன் முரண்படுகின்றனர். அதனால் நான் குழப்பமடைவதில்லை. அவர்களின் சமையலறையில் நாம் பாத்திரங்களைக் கழுவத் தயார் இல்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்