எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்

by Staff Writer 18-09-2019 | 12:47 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கறுவாத்தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் சில பகுதிகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கம், வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல தொழிங்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதுவரை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கொழும்பில் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்புப் பேரணி தற்போது வோட்பிளேஸ் வழியாக நகர மண்டபத்தை சென்றடைந்துள்ளது. சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று (18) ஒன்பதாவது நாளை எட்டியுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்திழன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.