அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 7:56 am

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது, வேட்பாளரின் சொத்துக்கள் தொடர்பில் வௌிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து அரசியல் கட்சிகளையும் அறிவுறுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று (17) இராஜகிரியவில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில், தேர்தல்கள் சட்டத்திற்கு பங்கம் ஏற்படுமாறு செயற்படுவதைத் தவிர்க்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும்போது, ஏனைய வேட்பாளர்களுக்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்குமாறும் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்