அம்பாறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 12:59 pm

Colombo (News 1st) அம்பாறை – பாலமுனை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளன.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுக வீதியில் பாலமுனை பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

T – 56 துப்பாக்கி ஒன்றும் 30 ரவைகளும் மெகசீன் ஒன்றும் 7 டெட்டனேட்டர்களும் 4 ஜெலட்னைட் குச்சிகளும் மேலும் சில வெடிபொட்களும் மீட்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இவை மறைத்துவைத்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்