Synthetic போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

Synthetic போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

by Staff Writer 17-09-2019 | 11:11 AM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் Synthetic என அழைக்கப்படும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு நாடுகளிலும் பாதுகாப்பு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளினூடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நாட்டில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாவனையார்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டமா அதிபரால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்கள், அதிகளவில் மீனவர்களூடாகவே முன்னெடுக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இதனிடையே, மாலைதீவு கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட இலங்கைக்கு சொந்தமான 4 படகுகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு படகில் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.