24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள்

24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள்

by Staff Writer 17-09-2019 | 1:08 PM
Colombo (News 1st) நாளை (18) காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. சம்பள முரண்பாடுகளை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.