மழையுடனான வானிலை; நோய்கள் பரவும் அபாயம்

மழையுடனான வானிலை; நோய்கள் பரவும் அபாயம்

by Staff Writer 17-09-2019 | 11:48 AM
Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான நோய்களைத் தவிர்த்துக்கொள்வதற்கு பொதுமக்கள், முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கீகனகே தெரிவித்துள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொதிக்க வைக்கப்பட்ட நீரைப் பருகுதல், மரக்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி உண்ணுதல், உணவுப் பொருட்களை மூடி வைத்தல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். மேலும், மழைக் காலங்களில் நனைவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கீகனகே மேலும் தெரிவித்துள்ளார்.