பொலிஸ் உத்தியோகத்தர்கள் எண்மர் பணிநீக்கம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எண்மர் பணிநீக்கம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எண்மர் பணிநீக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 10:22 am

Colombo (News 1st) சிலாபம் ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்றதாகக் கிடைத்த தகவலுக்கமைய, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஐவரும் பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி ஒருவரும் அடங்குகின்றனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டலொன்றில் கடந்த 6ஆம் திகதி சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அங்கிருந்த 20 சந்தேகநபர்களில் 9 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களிடம் இருந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை கைது செய்யாதிருந்தமை தொடர்பில் கிடைத்த தகவலுக்கமையவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்