பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு விசாரணை

பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு விசாரணை

பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 1:45 pm

Colombo (News 1st) கட்டாய விடுமுறையளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு பிரசன்ன ஜயவர்தன, P. பத்மன் சூரசேன மற்றும் S. துரைராஜா ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனக்கு கட்டாய விடுமுறை வழங்கிய ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்