பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

by Staff Writer 17-09-2019 | 8:24 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று (17) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஏற்கனவே தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ஷாந்த பண்டார இன்று மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். அதேநேரம், கே.ஹேரத் என்பவரும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் சிறிசேனவும் புதிய பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்கவுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று முன்னிய சில பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும், தற்போதைய அரசியல் நிலவரங்களின் படி பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன. அந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஏனைய செய்திகள்