நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: யாழில் கண்காட்சி ஆரம்பம்

நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: யாழில் கண்காட்சி ஆரம்பம்

நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: யாழில் கண்காட்சி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 7:59 pm

Colombo (News 1st) ”காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய, நாடளாவிய ரீதியில் இந்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ் – திருநெல்வேலி விவசாய திணைக்கள தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி, இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, பயிர்செய்கை, விலங்கு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த கண்காட்சியின் ஊடாக தெளிவூட்டப்படவுள்ளது.

விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கண்காட்சியை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்