சர்வதேச புத்தகக் கண்காட்சி

சர்வதேச புத்தகக் கண்காட்சி

சர்வதேச புத்தகக் கண்காட்சி

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 8:03 am

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.

ஆசியாவிலேயே வெற்றிகரமான புத்தகக் கண்காட்சியாகக் கருதப்படும் இந்தக் கண்காட்சியை இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ளது.

417 உள்நாட்டு, வெளிநாட்டு காட்சிக் கூடங்கள் இங்கு அமையப்பெறவுள்ளதுடன், இந்தியா, சீனா, மலேசியா, பிரித்தானியா, ஈரான் போன்ற பல நாடுகள் இதில் கலந்துகொள்ளவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்