கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்

கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்

கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்

எழுத்தாளர் Bella Dalima

17 Sep, 2019 | 3:45 pm

கணித மேதை என்று புகழப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு ஹிந்தி திரைப்படமாக உருவாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், சகுந்தலா தேவி வேடத்தில் நடிக்கிறார்.

வித்யா பாலன், சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார்.

தற்போது, சகுந்தலா தேவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் அனு மேனன், லண்டன் பாரிஸ் நியூயார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் கோடை விடுமுறை சமயத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்