இஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று

இஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று

இஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2019 | 1:14 pm

Colombo (News 1st) இஸ்ரேலில் இன்றைய தினம் (17) பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.

5 மாதங்களில் இடம்பெறும் இரண்டாவது பொதுத் தேர்தலாக இதுவாகும்.

கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, கூட்டணி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது போனமையால், விரைவான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு விடுத்திருந்தார்.

இந்தநிலையில், பிரதமரின் லிகுட் கட்சிக்கும் முன்னாள் இராணுவத்தளபதி பென்னி கன்ட்ஸ் (Benny Gantz) தலைமையிலான Blue and White கட்சிக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணிக்கு தேர்தல் நிறைவடைந்ததும், கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமது ஐந்தாவது தவணைக்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்