கடும் மழை; மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 16-09-2019 | 2:15 PM
Colombo (News 1st) தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது. கடும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் குறித்த பகுதிகளிலிருந்து வௌியேறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முப்படையினர் தயாராக உள்ளதாகவும் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கற்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பதுளை சொரனாதோட்ட பகுதியிலுள்ள 88 பேர், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வௌிறே்றப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடிமின்னல் தாக்கத்திலிரு்து பாதுகாப்பு பெறுவதற்குத் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றும் நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, இன்று (16) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 192 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக அத்தனகளு ஓயா மற்றும் களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஆறுகளையும் அதன் கிளை ஆறுகளையும் அண்மித்து வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக கொட்டாஞ்சேனை ஆமர்வீதி இன்று காலை வௌ்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கினிகத்தேன நோட்டன்பிரிஜ் வீதியில் மண்மேடு சரிந்து வீழந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால் அதிவழுகொண்ட மின்பிறப்பாக்கி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கடும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் குறித்த பகுதிகளிலிருந்து வௌியேறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முப்படையினர் தயாராக உள்ளதாகவும் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் இன்றும் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களை பயன்படுத்தும்போது கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.