ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2019 | 11:07 am

Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார்.

இன்று (16) காலை 9.30 மணியளவில் பிரதமர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகினார்.

விவசாய அமைச்சுக்காகப் பயன்படுத்தப்பட்ட இராஜகிரியவில் உள்ள கட்டடமொன்றை குத்தகைக்காகப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதமரிடம் இதன்போது சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

சாட்சி வழங்கியதன் பின்னர் பிரதமர் ஆணைக்குழுவிலிருந்து வௌியேறியதோடு, பிற்பகல் 1.15 மணிக்கு மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான விசாரணைகளுக்காக இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ விஜேரத்ன உள்ளிட்டோர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்