அத்தனகளு ஓயா பெருக்கெடுப்பு; மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

அத்தனகளு ஓயா பெருக்கெடுப்பு; மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

அத்தனகளு ஓயா பெருக்கெடுப்பு; மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2019 | 4:59 pm

Colombo (News 1st) பலத்த மழை காரணமாக களனி, களு, மகாவலி, அத்தனகளு மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, அத்தனகளு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக தூனமலே பகுதியில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தாழ்நிலப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு, கடும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் குறித்த பகுதிகளிலிருந்து வௌியேறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்