தாமரைக் கோபுரம் நாளை திறப்பு

தாமரைக் கோபுரம் நாளை திறப்பு

by Staff Writer 15-09-2019 | 10:23 AM
Colombo (News 1st) தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் நாளை (16) திறக்கப்படவுள்ளது. தாமரைக் கோபுரமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 350 மீற்றர் உயரமான 17 மாடிகளைக் கொண்ட இந்தக் கோபுரம், 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும். நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன. இதேவேளை, தாமரைக் கோபுரத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வௌியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 45 ரூபா பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன நாளைய தினம் வௌியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.